மன்னாரில் ‘ஊமை சுவடுகள்’ நூல் வெளியீட்டு விழா

( வாஸ் கூஞ்ஞ) 04.02.2024

மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகவும் புலம்பெயர் தேசத்தில் வசிப்பவருமான திருமதி ஜனகா ஜெகநாதன் அவர்கள் எழுதிய ஊமை சுவடுகள் எனும் பல்சுவை நூல் வெளியீட்டு விழா   மிகவும் சிறப்பாக நடைபெற்றது

இந்த நிகழ்வானது  சனிக்கிழமை (3)  பிற்பகல் 3.00 மணியளவில்  விடத்தல்தீவு புனித ஜோசப் வாஸ் பாடசாலை அதிபர் திரு.ஜோ.கியோமர் பயஸ் அவர்களின் தலைமையில் பாடசாலையின் விழா மண்டபத்தில்  நடைபெற்றது

இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கலந்து கொண்டு நூலினை வெளியிடு செய்து வைத்தார்
மேலும்  நூலpன் சிறப்புரையை மன்னார் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் அவர்களும் வாழ்த்துரையை மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஸ். சிவகரன் அவர்களும்  வழங்கினர்

அத்துடன் நூல் விமர்சனத்தை ஊடகவியலாளர் ஜனாப். சுவைப்.எம் காசிம் அவர்கள் வழங்கியிருந்தார்

மேலும் இந்த நிகழ்வில் கிராமத்தின் பங்குத் தந்தை  ‘லட்சுமி கரங்கள்’ தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் சக்தி ராமலிங்கம் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் கலைஞர்கள்  என்று பலரும் கலந்து கொண்டார்கள்