மருந்துப்பொருள் மோசடிக்கு நீதி நிலைநாட்டப்படும் என எதிர்பார்த்திருக்கிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

சுகாதாரத்துறையில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் காரணமாக முன்னாள் சுகாதார அமைச்சர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்த அமைப்பில் நீதி கிட்டும் என எதிர்ப்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மனித இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட மேலும் சில தரமான மருந்துகளுக்கு பதிலாக தரம் குறைந்த மருந்துகளை வழங்கியதால் நுவரெலியா மாவட்டத்தில் 20 க்கும் மேற்பட்டோர் பார்வையற்றவர்களாக மாறியுள்ளனர்.வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டில் இந்தச் செயல்கள் குற்றவியல் கொள்ளைகளாகவே பார்க்கப்படுவதாகவும்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்தக் கொள்ளைகளுக்கு இடமில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 81 ஆவது கட்டமாக,காலி, கிந்தோட்ட மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (03) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்