( வாஸ் கூஞ்ஞ)
ஊடகத்துறை அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஊடகத்துறை அமைச்சினால் இரண்டு நாட்கள் வேலைத்திட்டங்களாக செயற்படுத்தப்பட்டு வரும் இந்த வேளையில் வடக்கு மாகாணத்தில் வியாழன் . வெள்ளி (01 ,02) ஆகிய இரு தினங்கள் யாழ்ப்பாணம் ‘நோத் கேற்’ என்ற ஹொட்டலில் இத் திட்டத்தின் 8 வது கூட்டமாக இடம்பெற்றது.
இதில் வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு , கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட தமிழ் , சிங்கள ஐம்பது ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊடகவியலாளர்கள் செய்திகள் சேகரிக்கச் செல்லும்போது அடையாளப்படுத்தும் குறுஞ்சட்டையும் வழங்கப்பட்டது.