எம்.ஏ.ஏ.அக்தார்)
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சித்தி அடைந்தவர்களுக்குரிய சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (02) ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் இணைப்பாளர் ஏ.எல்.எம்.றிஸ்வி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி பஸ்மிலா ரவிராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இணைப்பாளர் திருமதி கல்யாணி தங்கராஜ் , பயிற்றுவிப்பாளர் டபிள்யூ. கல்யாணி ,ஆரையம்பதி நகர சபை செயலாளர் சர்வேஸ்வரன் ஆகியோர் கெளரவ அதிதிகலாக கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் இரண்டாம் மொழி பயிற்சியில் சித்தி அடைந்த சுமார் 41 அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டன