மட்டு.மேற்கில் புதிய அதிபர்களுக்கு இடநிலைப்படுத்தல் கடிதங்கள் வழங்கி வைப்பு

அண்மையில் அதிபர் நியமனம் பெற்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்டவர்களை பாடசாலைகளில் நிலைப்படுத்துவதற்கான நியமனக்கடிதங்கள் இன்று(02) வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணி;ப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் இதனை வழங்கி வைத்தார். குறித்த வலயத்தில் ஆசிரியர்களாக கடமையாற்றி அதிபர் சேவைக்குள் நியமனம் பெற்ற 11பேருக்கே கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைய இந்நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த அதிபர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்களினால் கைலாகு கொடுத்து வரவேற்கப்பட்டனர். மேலும் வலயத்திற்குட்பட்ட அதிபர்களும் அவர்களை பாராட்டி வரவேற்றனர்.
இதன்போது அதிபர் சேவையின் முக்கியத்துவம் தொடர்பில் வலயக்கல்விப் பணிப்பாளரினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையுடன், அதிபர் வகிபாகம் தொடர்பில் வலயத்திற்குட்பட்ட சிரேஸ்ட அதிபர் சுந்தரமோகன் சிறு கருத்துரையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டிருந்தனர்.