இன்று காரைதீவில் சுதந்திர தினத்தை ஒட்டிய சிரமதானம்!

( வி.ரி. சகாதேவராஜா)
 இலங்கை குடியரசின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று(2) வெள்ளிக்கிழமை கடற்கரை பகுதியை சுத்தம் செய்தனர்.
காரைதீவு
பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையிலான பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள் “பிளாஸ்டிக் அற்ற வெள்ளிக்கிழமை” ( Plastic free Friday) என்கின்ற தொனியில் கடலோர சுத்தத்தை மேற்கொண்டனர்.
சிரமதானத்தில் பிரதேச சபை மற்றும் பொலிசார் பங்கு பற்றினர்.
இவ் வேலைத்திட்டத்தை இன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை மேற்கொண்டு இருந்தார்கள்.
 இதனால் கடலோரத்தின் பெரிய பகுதிகள்  பிளாஸ்டிக் அற்ற பிரதேசமாக துப்பரவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.