புலனாய்வுப் பிரிவினர்  வடி சாராய பிரச்சனையில் திணறுவது ஏன்? சாணக்கியன் கேள்வி.

வவுணதீவு மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழு கூட்டங்கள் இன்றைய தினம் இடம்பெற்றது. வடி சாரயப் பிரச்சனை மட்டக்களப்பில் பரவலாக பல இடங்களில் காணப்படுகின்றது இருப்பினும் புலனாய்வுப் பிரிவினர். வருடத்துக்கு ஒரு முறை மக்களுக்காக உயிர் நீர்த்த தத்தம் உறவுகளை நினைவு கூறி அஞ்சலி செய்யும் நாட்களில் நடக்கும் சம்பவங்களை மாத்திரம் புலனாய்வு செய்து கைதுகளை மேற்கொள்கின்றனர் அதில் கேக் கொடுத்தவர் வெட்டியவர் போன்றோரை கூட கைது செய்தார்கள். ஆனால் வருடம் முழுவதும் ஒவ்வெரு நாளும் நடக்கும் வடி சாரயப் பிரச்சனைக்கு மாத்திரம் முற்றுப் புள்ளி வைக்க முடியவில்லை. அதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பான சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.