(கனகராசா சரவணன்) மட்டு வவுணதீவு கொத்தியாபுலை பிரதேசத்தில்;தில க.பொ.த.சாதாரண தரத்தில் 8 ஏ ஒரு சி புள்ளிகளை பெற்று சித்தியடைந்த மாணவி திருச்செல்வம் தரணிக்காவை கனடாவிலுள்ள இந்திரா யோகேந்திரன் குடும்பத்தின் நிதி பங்களிப்புடன் வடகிழக்கு முன்னேற்றச் சங்க தலைவர் கு.வி. லவக்குமார்; இன்று திங்கட்கிழமை (30) துவிச்சக்கரவண்டி ஒன்றையும் பணப்பரிசும் வழங்கி பாராட்டி கௌரவித்தார்.
மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான வவுணதீவு கொத்தியாபுலை கலைவாணி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் மாணவி அண்;மையில் வெளியிடப்பட்ட க.பொ.த சாதாரண பரீட்சையில் 8 ஏ ஒரு சி புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.
குடும்ப வறுமையிலும்; கல்வியில் சாதனைபடைத்த இந்த மாணவியின் உயர்தர கல்வியை தொடர்வதற்கு அவரின் கல்விக்காக மாதாந்தம் 50 டொலர் பணத்தை வழங்கி உதவி செய்ய கனடாவிலுள்ள இந்திரா யோகேந்திரன் குடும்பத்தினர் முன்வந்தனர்.
இந்த நிலையில் அவர்களின் நிதி பங்களிப்புடன் வடகிழக்கு முன்னேற்றச் சங்க தலைவர் கு.வி.லவக்குமார், மாவட்ட சர்வமத செயலாளரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான வணபிதா ஜெகதாஸ் ஆகியோர் மாணவியின் வீட்டுக்கு இன்று சென்று அவருக்கு மாணவிக்கு முவிச்சக்கரவண்டி ஒன்றையும் 15 ஆயிரம் ரூபா பணத்தையும் வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.