எருவில் கிராமத்தில் EPL சுற்றுப்போட்டி.

(எருவில் துசி) கிராமத்தில் செயல்பட்டு வரும் கழகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து எருவில் பிரீமியர் லீக் இ பி எல் கிரிக்கெட் சுற்று போட்டி ஒன்றினை நடாத்த தீர்மானித்துள்ளது. குறித்த சுற்று போட்டிக்கான பொறுப்பாளர்கள் தெரிவு 24.01 2024 ஆம் திகதி நடைபெற்றிருந்த நிலையில் 28. 01. 2024ஆம் திகதி வீரர்களுக்கான ஏலம் இடம் பெற்றது.

கிராமத்தில் உள்ள இளைஞர் கழகங்கள் இணைந்து ஐந்து அணிகளாக பிரிந்து எதிர்வரும் மாசி மாதம் சுற்று போட்டிகள் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அணிகளாக ஏரூர் இலவன்,ஏரூர் லயன்ஸ், ஏரூர் ஜங் ரைக்கர்ஸ் ஏரூர் பூல்ஸ், ஏரூர் ஈக்கிள் ஆகிய அணிகளும் இதன் உரிமையாளர்களாக முறையே ஏ.நிசாந்தன் தேவசுதன் பி.யுவராஜ் எஸ்.சசிகுமார் ஆர்.சசிகுமார் ஆகியோர் உரிமையாளராக செயல்பட அணியின் தலைவர்களாக கோகுல், நிமல்ராஜ், ஜெயப்பிரசாத், சஞ்சய், ஜசுவர்மன் ஆகியோரும் செயற்படுகின்றனர் எருவில் கிராமத்தில் பல கழகங்கள் பல்வேறு செயல்பாடுகளிலே மேற்கொண்டாலும் கிராமத்தினுடைய ஒற்றுமையினை வெளிக்காட்டும் வகையில் இந்த இபிஎல் சுற்று போட்டி நடத்தப்படுகின்றது. இதன் மூலம் கழகங்களின் ஒற்றுமை மேலோங்குவதோடு கிராமத்தில் உள்ள இளைஞர்களின் கிரிக்கெட் ஆற்றலை மேலும் விரிவுபடுத்தவும் பிரதேச மாவட்ட தேசிய ரீதியில் இவர்களை மென்மேலும் வளப்படுத்துவதுமாக இந்தசுற்று போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.