இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக திருகோணமலையைச் சேர்ந்த சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளபோதிலும், அனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
பொதுச் செயலாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்தபோதிலும், எனினும் கட்சியின் மற்றுமொரு சிரேஷ்ட தலைவரான எம்.ஏ.சுமந்திரன் மத்திய குழுவால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் சரியா தவறா என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்பே நடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த விடயத்ததால், பொதுச் சபைக் கூட்டத்தில் இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதால் நாளை நடைபெறவிருந்த கட்சியின் தேசிய மாநாடு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்தில் ஏனைய பதவிகளுக்கான தெரிவுக் கூட்டம் இன்று இடம்பெற்றது.
திருகோணமலை, மூன்றாம் கட்டைப் பகுதியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
முற்பகல் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதற்கமைய கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் சண்முகம் குகதாசனை நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. அதையடுத்து ஏனைய பதவிகளுக்கும் புதியவர்களின் பெயர்கள் தீர்மானிக்கப்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக சண்முகம் குகதாசனை நியமித்தமைக்கு எதிராக அவரின் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுச் சபை உறுப்பினர்களே போர்க்கொடி தூக்கினார்கள்.
இதையடுத்துப் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நியமித்த புதிய நிர்வாகக் குழுப் பட்டியலை ஏற்பதா? இல்லையா? என்று பொதுச் சபை உறுப்பினர்கள் மத்தியில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்பிரகாரம் மத்திய செயற்குழு நியமித்த புதிய நிர்வாகக் குழுவுக்கு ஆதரவாக 112 வாக்குகளும், எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதையடுத்துப் புதிய நிர்வாகக் குழு அங்கீகரிக்கப்பட்டது.
எனினும் வாக்கெடுப்பு பகிரங்கமாக இடம்பெற்றதாகவும், எனினும் ஜனநாயக ரீதியில் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டுமாயின் இரகசிய வாக்கெடுப்கே நடத்தப்பட்டிருக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார்.
மேலும் வாக்கெடுப்பு நடைபெறும்போது சுமார் 100 பேர் வரையில் வாக்களிக்கவில்லை எனவும் அவர்கள் நாளைய தினமே வாக்கெடுப்பு நடைபெறுமென நினைத்து கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றையய பொதுச் செயலாளர் தெரிவானது ஜனநாயக ரீதியில் இடம்பெறவில்லை என இந்தப் பதிவிக்கு போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவிக்கின்றார்.
தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் நிர்வாகக் குழு:
பொதுச் செயலாளர் – ச.குகதாசன்
சிரேஷ்ட உப தலைவர் – சி.வி.கே.சிவஞானம்
துணைப் பொதுச் செயலாளராக – சேவியர் குலநாயகயகமும்
இணைப் பொருளாளர்கள் – ஞா.ஸ்ரீநேசன், பெ. கனகசபாபதி
துணைத் தலைவர்கள் – கே.வி.தவராசா, சார்ள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், பா.அரியநேத்திரன், ப.சத்தியலிங்கம்
இணைப் செயலாளர்கள் – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, ரஞ்சினி கனகராசா, த.குருகுலராஜா, ஈ.சரவணபவன், இரா.சாணக்கியன், சி.சிவமோகன்
செயற்குழு உறுப்பினர்கள் – எம்.ஏ.சுமந்திரன், கருணாநிதி, பரஞ்சோதி, சயந்தன், ரவிகரன், இரட்ணவடிவேல், யோகேஸ்வரன், கோடீஸ்வரன், கனகசிங்கம், ஜெயக்குமார்
நன்றி நியுஸ் ரிப்போட்