பொய் வாக்குறுதிகளை வழங்கினால் அவரையே தலைவராக தெரிவுசெய்யும் மரபு

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார

ஏறாவூர் நிருபர் நாஸர்)

இந்த நாட்டு மக்கள் தேர்தலின்போது சில்லறைத்தனமான முடிவுகளை எடுப்பதனாலேயே எமது நாடு இன்னும் முன்னேற்றமடையாதிருப்பதாக  ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்;.

மூன்று ரூபா ஐம்பது சதத்திற்கு பாண் தருவதாகவும்                           முந்நூற்றி ஐம்பது ரூபாவிற்கு உரம் தருவதாகவும்                            பொய் வாக்குறுதிகளை வழங்கினால் அவரையே தலைவராக தெரிவுசெய்யும் மரபு எமது நாட்டு மக்களிடம் காணப்படுவது கவலையான விடயம்             என்றும் கூறினார்.

மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற                விசேட வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு                            அவர் உரையாற்றினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு  பட்டிருப்பு மற்றும் கல்குடா               ஆகிய தேர்தல் தொகுதிகளைச்சேர்ந்த செயற்பாட்டாளர்கள்                இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கென வரையறுக்கப்பட்ட வட்டாரங்கள் இதன்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.                                   அத்துடன் இதற்காக  செயற்பாட்டாளர்களது இணக்கம் கோரப்பட்டது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இதன்போது பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்எதிர்வரும் செப்டம்பர் அல்லது          ஒக்டோபர் மாதம் இந்த நாட்டின் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

அத்தேர்தல் நடைபெற்று   சூடு ஆறுவதற்கிடையிலேயே                   பொதுத் தேர்தல் நடைபெறும். அடுத்த வருடத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலும் மாகாண சபைத் தேர்தலும் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டார்.

கோட்டபய ராஜபக்ஷ இந்த நாட்டைவிட்டு ஓடும்போது நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை. இதனால் அவர் பெற்றுக்கொண்ட 69 இலட்சம் வாக்குகள் சூன்யமாகிப்போயின. 24 இலட்சம் வாக்குகளைப்பெற்றுதுடன் 54 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்ட சஜித் பிரேமதாசவும் நாட்டைப்பொறுப்பேற்க பயந்துவிட்டார். அதேபோல ஜேவிபிää தமிழ்க் கூட்டமைப்பு போன்ற எந்த ஒரு அணியினரும் எமது நாட்டை பொறுப்பேற்கவில்லை. இந்த நிலையில் தனிநபரான ரணில் விக்ரமசிங்க நாட்டைப்பொறுப்பெற்று பொருட்தட்டுப்பாடுகளை நீக்கி விழித்தெழச்செய்தார். மக்களுடைய வாழ்வில் சுமுகநிலையை ஏற்படுத்தினார். இன்று நாட்டை அபிவிருத்தி செய்யும் கடமையே எஞ்சியுள்ளது. வக்குரோத்து நிலையிலிருந்த நாட்டை அடுத்த ஒருவருட காலத்திற்குள் எமது நாட்டை மீட்சிபெறச்செய்ய  முடியுமென்றால் ஐந்து வருடங்களுக்கு தலைமைப்பொறுப்பை வழங்கினால் எமது நாடு மீள்எழுச்சிபெறும் என்பதில் ஐயமில்லை. எனவே அதற்கான ஒரே தலைமைத்துவம் ரணில் விக்ரம சிங்க மாத்திரமே என்பதை எவரும் மறுக்கமுடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களான ஏஎம்எம். பிர்தௌஸ் , எஸ்.சுதர்சன் , வி. விஜயகுமார் , எஸ். ஜேகன் ,   கலாநிதி எம்பி. முஸம்மில் உட்பட பலர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.