துண்டித்த மின்சாரத்தை இணைப்பதற்கு பெண் ஒருவரை படுக்கையறைக்கு கூப்பிட்ட மின்சாரசபை ஊழியர் ஒருவரை நைப்புடைப்பு செய்து பொலிசாரிடம் ஒப்படைப்பு –

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் சம்பவம்–

(கனகராசா சரவணன்)

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசதம் ஒன்றில் வீடு ஒன்றில் மின்சார நிலுவை காரணமாக துண்டித்த மின்சாரத்தை நிலுவையை செலுத்தாது மீண்டு; மின்சாரத்தை இணைத்துதர தன்னுடன் படுக்கையறைக்கு வருமாறு பெண் ஒருவரின் கையைப்பிடித்து இழுத்து மின்சார சபை ஊழியர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து நைப்புடைப்பு செய்து பொலிசாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை (25) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பிரதேசம் ஒன்றிலுள்ள வீடு ஒன்றின் மின்சார நிலுவை காரணமாக மின்சாரத்தை துண்டிப்பதற்காக புதன்கிழமை (24)  மின்சாரசபை ஊழியர்கள் சென்ற நிலையில் வீட்டில்  அந்த வீட்டின் மின்சாரத்தை துண்டித்துவிட்டு நிலுவை பணத்தை செலுத்திவிட்டு அறிவிக்குமாறு தனிமையில் இருந்த பெண்ணிடம் தெரிவித்து அவரின் கையடக்க தொலைபேசி இலக்கத்தை அங்கு சென்ற மின்சாரசபை ஊழியர் ஒருவர் கேட்டுவாங்கி சென்றார்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசி இலக்கத்தை பெற்றுக் கொண்ட மின்சார சபை ஊழியர் அப்பெண்ணுடன் தொடர்பு கொண்டு  நேரடியாக பெண்ணின் வீட்டிற்கு சென்று வறுமையில் இருப்பவர்களுக்கு தான் உதவுவதாகவும் துண்டித்த மின்சாரத்தை நிலுவை செலுத்தாமல் மீண்டும் இனைத்து தருவதாகவும் அதற்கு தன்னுடன் ஒரு மணித்தியாலம் படுக்கையறைக்கு வருமாறு தெரிவித்து பெண்ணின் கையைபிடித்து இழுத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் கூச்சலிட்டதையடுத்து வீட்டினுள் இருந்த பெண்ணின் சகோதரன் மற்றும் அயலவர்கள் ஒன்றிணைந்து மின்சார சபை ஊழியரை மடக்கிபிடித்து நைப்புடைப்பு செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும் இவரை பலாத்தகார பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ்  வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.