டெங்கு அபாயத்தில் காணப்பட்ட மன்னார் பொது வைத்தியசாலையில் பாரிய சிரமதானம்

(வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டச் செயலகமும் திணைக்கள உத்தியோகத்தர்களும் இணைந்து மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் பாரிய சிரமதான பணிகள் வியாழக்கிழமை (25) முன்னெடுக்கப்பட்டது

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுற்று சூழலால் டெங்கு அபாயம் காணப்படுவதாக பொது மக்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

இவற்றை கவனத்துக்கு எடுத்திருந்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் மன்னார் பொது வைத்தியசாலையை நெரில் சென்று பார்வையிட்டபின் இது தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் திணைக்கள அதிகாரிகளுடன் விஷேட கலந்தரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதற்கமைவாகவே இச்சிரமதானப் பணி குறிப்பிட்ட தினத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் றடைபெற்ற இந்த சிரமதானப் பணியில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் உதவி அரசாங்க அதிபர்கள் (காணி மற்றம் நிர்வாகம்) மற்றம் உத்தியோகத்தர்கள் மன்னார் அனர்த்த முகாடைத்துவப் பிரிவு மன்னார் பிரதேச செயலகம் மன்னார் நகரசபை மன்னார் பிரதேச சபை பல்வேறு திணைக்கள உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு படையினர் அரசசார்பற்ற நிறுவனங்களின்  பொதுமக்கள்  பங்குபற்றுதலோடு இந்த சிரமதானப் பணி மிகவும் சிரப்பாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது