தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு மன்னாரில் கட்சி தொண்டர்களால் பெரும் வரவேற்பு

வாஸ் கூஞ்ஞ)

கடந்த 21 ந் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது தலைவராக கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவருக்கு மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பெரும் வரவேற்பை மன்னாரில் நடாத்தினர்.

வியாழக்கிழமை (25) மாலை மன்னாரில் நடைபெற்ற இவ் வரவேற்பு விழாவில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் எஸ்.சிறிதரன் மற்றும் அதிதிகள் மன்னார் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததைத் தொடர்ந்து மன்னார் தமிழரசுக் கட்சியின் அலுவலக முன்றலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதில் மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிநேசன் , அரியேந்திரன் , அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் , கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர் அகிலன் முத்துகுமாரசாமி உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.