தமிழர் மரபுப்படி புதிர் எடுத்தல் நிகழ்வு

க.ருத்திரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் தமிழர் மரபுப்படி புதிர் எடுத்தல் நிகழ்வு ஆலயங்கள் தோறும் இன்று-25 நடைபெற்றது.
தைப்பூச திருநாளாகிய இன்று இதுபோன்றதொரு நிகழ்வொன்று வந்தாறு
மூலையிலும் நடைபெற்றது.


குறித்த நிகழ்வானது ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம்,ஸ்ரீ நிர்முகப் பிள்ளையார் ஆலயம்,ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தினர்களின் ஏற்பாட்டில்  டாக்டர் இ.ஸ்ரீநாத் அவர்களின் உபயத்துடன் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது. பெரும்போகத்திற்கான வேளான்மை அறுவடை செய்யப்பட்டு  வயற்கரை விநாயகர் ஆலயத்தில் சமய கிரிகைகளுடன் அதிகாலை 8.06 மணிக்கு சுபமூகுர்த்த வேளையில் புதிர் எடுக்கப்பட்டது.பின்னர் அங்கிருந்து வீதி ஊர்வலமாக நாதஸ்வர மேளதாள இசையுடன் ஸ்ரீ நிர்முகப் பிள்ளையார்,ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம்,ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம்,போன்ற ஆலயங்களை தரிசித்து அவ்வாலயங்களில் உள்ள மண்டபங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மற்றும் நெற் கதிர்கள் என்பன குவிக்கப்பட்டு  விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்று மக்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் ஆலயகுரு சிவஸ்ரீ ச.தெய்வேந்திரகுருக்கள்,மேற்குறித்த ஆலயங்களின் தலைவர் சொ.தங்கராசா,கலாச்சார உத்தியோகத்தர் கே.எஸ்.ஆர்.சிவகுமார்,டாக்டர் இ.ஸ்ரீநாத் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.