மீனவர் பலத்தைக் கட்டியெழுப்புவோம் அம்பாரை மாவட்ட மீனவர்களுக்கான மாநாடு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மீன்பிடி தொழில் அனர்த்தத்தில் தீர்விற்கான மீனவர் பலத்தைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் அம்பாரை மாவட்ட மீனவர்களுக்கான மாநாடு நேற்று முன்தினம் புதன்கிழமை சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் தேசிய தொழிற் சங்க சம்மேளனத்தின் தலைவருமான கே.டி லால் காந்த மற்றும்
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தலைவருமான  நிஹால் கலபதி மற்றும்
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளருமான  ரத்ன கமகே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.