அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல்.

(சுமன்,துசி)அகம் மனித வள நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியாளர்களுடான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வி இன்றைய தினம் தன்னாமுனை மியானி மண்டபத்தில் இடம்பெற்றது.

அகம் மனித வள நிலையத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஊடகவியாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவதிரன், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியாளர்கள், வளர்ந்துவரும் சமூக வளைதளத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் செயற்படும் ஊடகவியலாளர்களைக் கௌரவிக்கும் முகமாகவும், எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் முகமாகவும் அகம் நிறுவனத்தினால் இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த அடிப்படையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுடன் இவ் ஒன்றுகூடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.