மட்டக்களப்பில் நிர்மான துறையினருக்கு கெளரவம் வழங்கள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

தேசிய நீர்மான சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் வருடாந்த கெளரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாந்தன் மற்று வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டனர்.

தேசிய நீர்மான சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் தேசமானி ரஞ்சித மூர்த்தி தலைமையில் அஞ்சனா மண்டபத்தில் நேற்று (20) திகதி இடம் பெற்ற இந் நிகழ்வில் விசேட அதிதியாக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் மற்றும் இலங்கை தேசிய நிர்மான சங்கத்தின் தலைவர் எம்.டரின்டன் பொல் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த வீதிகள் அவிருத்தி ராஜாங்க அமைச்சர் கொவிற் தொற்று ஏற்பட்ட காலத்தில் நிர்மான துறையில் ஈடுபட்டவர்கள் பாதிக்கப்பட்டதுடன் தற்போது இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் ஒரு துறையாக உள்ளது என்றார்.

வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி, பிரதமர், மற்றும் அமைச்சர்களிடம் கலந்துறையாடி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கொண்டுவந்தாக இதன் போது கூறினார்.

மாவட்டத்தில் நிர்மானத் துறையினை கட்டியெழுப்புதற்கு  பங்களிப்புச் செய்தவர்களுக்கு   அதிதிகளினால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உயர் அதிகாரிகள்,பொறியியலாளர்கள், துறைசார் நிபுனர்கள், அரச ஒப்பந்தகாரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.