எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பொங்கல் விழா அதன் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு. சுகுணன் தலைமையில் பிரதான மண்டபத்தில் இன்று (19) திகதி மிக சிறப்பாக இடம் பெற்றது.
தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் தைப்பொங்கல் நிகழ்வானது தமிழர் திருவிழாவாக மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே .ஜே முரளிதரன் பிரதம அதிதியாகவும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபையின் ஆணையாளர் என். சிவலிங்கம் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இவ் விழாவில் கண்கவர் கலை கலாச்சார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.
இந் நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.