தொழில்களில் மிகவும் சிறந்த தொழில் விவசாயமே. அரசாங்க அதிபர் க.கனகவேஸ்வரன்

(வாஸ் கூஞ்ஞ)

தொழில்களிலே மிகவும் சிறந்த தொழில் விவசாயமே.  சூரியனும் உழவர்களும் தகுந்த முறையில் செயல்படாவிட்டால் மனித வாழ்வே அஸ்தமித்துவிடும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகவேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட செயலக அலவலர்கள் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலகத்தில் சூரியப்பொங்களும் உழவர் கௌரவிப்பும் புதன் கிழமை (17) மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட செயலாளர் திரு க.கணகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மாவட்ட செயலாளர் திரு க.கணகேஸ்வரன் தொடர்ந்து தெரிவிக்கையில்

தமிழர்களின் ஒரு விழாவாக தைப்பொங்களும் கொண்டாடப்படுகின்றது. இவ்விழாவானது எமக்கு உணவு வழங்கின்ற உழவர்களுக்கும் இதற்கான நல்ல காலநிலையை தருகின்ற சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு நிகழ்வாகவே இத் தைப்பொங்கல் விழா திகழ்கின்றது.

தொழில்களிலே மிகவும் சிறப்பானத் தொழில் விவசாயத் தொழில் ஆகும். யாராக இருந்தாலும் விவசாயிகளிலேயே தங்கி வாழ்கின்றனர்.

விவசாயிகள் தங்கள் தொழிலை கைவிட்டால் நாம் எவ்வாறான பிரச்சனைகளுக்கு தள்ளப்படுகின்றோம் என்பது யாவருக்கும் தெரியும்.

தற்பொழுது மரக்கறிகளின் விலையேற்றம் உச்ச நிலையை அடைந்துள்ளதும் நாம் அறிவோம். சூரியனும் விவசாயிகளும் கைகொடுக்காமையால் இந்த நிலை உருவாகியுள்ளது என இவ்வாறு தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)