தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் அணிதிரளவேண்டும் – கருணா அம்மான் தெரிவிப்பு —

கனகராசா சரவணன்)

தமிழ் மக்களின் இருப்புக்களை தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் கட்சிகள் அனைத்தும் பதவி பட்டங்களை துறந்துவிட்டு ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு எங்களுடைய தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் எங்களுடைய பலவீனங்கள் தான் எதிரிகள் சிறந்தமுறையில் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முரளீதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியில் கருணா அம்மானின் கட்சியான தமிழ் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைமைக்காரியாலயம் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்ட பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

எமது கட்சி ஆரம்பித்து 7 வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 8 ஆசனங்களை பெற்றோம் அம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 30 ஆயிரத்துக்கு மேற்பட் வாக்குகளை பெற்று 72 வருட வரலாற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடித்த பெருமையை நிரூபித்துகாட்டினோம்.

அம்பாறை மாவட்ட மக்கள் கட்சிக்கு அத்திவாரம் இட்ட மக்கள் அவர்களின் நன்றியை ஒருபோதும் மறக்கமாட்டேன். அடுத்த தேர்தலில் யாருடன் இணைந்து செயற்படுவதாக மத்திய குழு கூடித்தான் நாங்கள் முடிவு எடுப்போம். அதேவேளை  சிறந்த கூட்டணிகள் தமிழ் தரப்பில் இருந்து வருமாயின் அதனுடன் சேர்ந்து கேட்பதற்கு நாம் தயார் பொதுவாக இரண்டு முறை பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்ற அமைச்சராக இருந்தோம்

இன்று எமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலுள்ள வளங்களை கொண்டு வருவதற்காகவே அல்லது மக்களின் தேவைகளை செயற்படுத்தி  வளங்களை கொண்டுவருதற்கு முயற்சிக்காமல் அங்கு மிகவும் அநாகரிகமான முறையில் கூச்சலிடுவதும்  தனிப்பட்ட குரோதங்களை விவாதிப்பதற்கான களமாக பயன்படுத்தி வருவது தான் இவர்களுடைய வேலையபக இருக்கின்றது.
தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியை ஆரம்பித்து இன்று நாங்கள் தனித்துவமாக செயல்பட்டு இருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் இலங்கைத் தமிழர் மகாசபையினுடைய கட்சியில் போட்டியிட்டு அம்பாறை மாவட்டத்தில் எமது பலத்தை நாம் நிரூபித்துக் காட்டினோம்.
ஒருபோதும் நாங்கள் மொட்டு கட்சியுடன்; சேர்ந்து எதிர்காலத்தில் பயணிக்க வேண்டிய நோக்கம் எமக்கு இல்லை. என்பதுடன் தேர்தல் காலத்தில் பலகட்சிகள் போட்டி இடுகிறார்கள் நாங்களும் போட்டு இருக்கிறோம் ஆகவே நாங்கள்தான் வாக்குகளை பிரிக்கிறோம் என்பது முட்டாள்தனமான சிந்தனையும் கற்பனையும் உண்மையிலேயே என்னை பொறுத்தவரை சிறந்த தகுதி மிக்கவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் அப்பொழுதுதான் எமது மக்களுக்காக சேவையாற்ற முடியும்.

ஜனாதிபதி உட்பட அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்திருக்கிறோம். ஜனாதிபதியும் நானும் மிகவும் நெருக்கமானவர்கள் இது அனைவருக்கும் தெரிந்த விடயம் ஆகவே உறவு என்றும் இருக்கின்றது இல்லை என்று சொல்வதற்கில்லை ஆகவே எங்களுடைய மக்களின் நன்மைக்காக நாங்கள் அவரை பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழர்களுடைய பாரம்பரிய கட்சி அது உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் தலைவரால் ஒருங்கிணைக்கப்பட்டு 22 ஆசனங்களை பெற்ற பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டு வரலாறுகள் இருக்கின்றது ஆனால் தற்போது இருக்கின்ற தலைமைத்துவங்கள்  பலவீனமற்றவையினால் அக்கட்சியி உடைந்து கொண்டிருக்கிறது மக்களும் இன்று அக்காட்சியை நிராகரித்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களது செயற்பாடுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக  குற்றம் சாட்டப்பட்ட தரப்பினரே விசாரிக்க வேண்டும் என்று அவர்களே கூறி இருக்கின்றார்கள் இந்த விசாரணை முடிவுகள் உண்மையானதாகவோ தீமை ஆனதாகவோ என்பதை விட மக்கள் இன்று யார் கொலைகாரர்கள் யார் கொள்ளைக்காரர்கள் என்பதை புரிந்து இருக்கின்றார்கள்.

கடந்த ஜனாதிபதிகள் தமிழர்களை ஏமாற்றும் வகையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்களோ தவிர வெளிப்படையான தன்மை போக்கில் அவர்கள் செயல்படவில்லை 13 வது திருத்தச் சட்டம் அமலாக்கப்படுமாக இருந்தால் இன்று ஒரு பிரச்சனையும் இல்லை தமிழர்கள் சுதந்திரமாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் அதனை வழங்குவதில் பாரிய இடையூறுகளும் இல்லை நாங்கள் 13 ஆவது திருத்த சட்டமூலம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் தனிப்பட்ட ரீதியில் எடுத்து கூறினேன் சட்டத்தை அமலாக்கும் படி கேட்டுக் கொண்டேன் காலம் வரும்போது அதனை அமுலாக்குவார் என அவர் கூறியிருந்தார்.
மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை விவகாரம் ஒரு மாடு என்பது அவர்களுடைய வாழ்வாதாரம் உண்மையிலேயே நம் மக்களின் வேதனை தாங்க முடியாத ஒரு வேதனை எக்கச்சக்கமான மாடுகள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றது இது தொடர்பாக உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு ஆளுநரும் தான் ஒன்று கூடி ஒருமித்த கருத்துடன் ஜனாதிபதியிடம் கதைத்து இவ்விடயத்தை அரசியல் ஆக்காமல் இதை மக்களுக்கான தீர்வாக பெற்றுக் கொடுக்க வேண்டும.
ஆனால் இங்கு இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதனை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு தனிப்பட்ட முறையில் சென்று ஜனாதிபதியை ஆளுக்கு ஒரு விதமாக கதைத்து சந்திப்பதனால் இவ்வாறான பிரச்சனைகள் தோன்றுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தான் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறுகின்றது சில மத குருமார்களை வைத்துக்கொண்டு இனவாதத்தை தூண்டிக்கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருந்தாலும் சரி பிள்ளையானவர்களாக இருந்தாலும் சரி பாராளுமன்றத்தை ஒரு சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.

அதைவிடுத்து தங்களுடைய காணி பிடிக்கின்ற பிரச்சனைகளை கோழி பிடிக்கின்ற பிரச்சனைகளையும் கொண்டு தான் பாராளுமன்றத்தில் கதைக்கின்றார்களோ தவிர மக்களுக்கு தேவையான விடயங்கள் பிரச்சினைகளை விவாதிப்பதில்லை. எங்களுக்கு சிறந்த அதிகாரம் வருகின்ற பொழுது நாங்கள் மேச்சல் தரை பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைப்போம்.

நான் மட்டக்களப்பு மண் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன் எங்களுடைய மக்களின் மரியாதை இன்று காற்றிலே பறக்கிறது இவர்களது செயல்பாட்டினால் அதை அவர்கள் உண்மையிலேயே அறிந்து கொண்டு தங்களை திருத்தி செயல்பட வேண்டும். அதேவேளை தமிழ் மக்கள் எதிர்காலத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்