திராய்க்கேணி கிராமமக்களுக்கு ஜேர்மன் சகோதரிகள் சமைத்த உணவு விநியோகம்.

( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள திராய்க்கேணி  தமிழ் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கு சமைத்த உணவை சிலர் வழங்கி வருகின்றனர்.

நேற்று ஜேர்மனியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான லிங்கம் அவர்களின் புத்திரிகளான ஆத்மிகா  துவாரகா  ஆகியோரின் அனுசரணையில் சமைத்த உணவு வழங்கப்பட்டது.
இதனை இங்கிருந்து தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்த காரைதீவு முன்னாள் தவிசாளரும் பிரபல சமூக சேவையாளருமான கி.ஜெயசிறில் அங்கு சென்று  மக்களுக்கு சமைத்த உணவை வழங்கினார்.
அங்குள்ள பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.. வீதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
 மக்கள் வீதிகளில் நின்று அந்த உணவை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.