தோணி கவிழ்ந்ததில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டபல்கலைக் கழக மாணவன்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குபட்பட்ட ஓந்தாச்சிமடத்திற்கும்கோட்டைக்கல்லாறு பகுதிக்கும் இடைப்பட்ட ஆற்றில் சனிக்கிழமை(13.01.2024) தோணியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் ஆற்றில்அள்ளுண்டுபோய் காணாமல்போயுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
குறித்த ஆற்றில் நீர் மிகவும் வேகமாக கடலை நோக்கிகரைபுரண்டோடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில்குறித்த இளைஞன் தோணியில் மீன் பிடித்துக்கொண்டிருந்துள்ளனர். அவ்வேளையில் நீரோட்டத்தில்சிக்குண்டு அவரது தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போதுஆற்று நீரில் அடித்துச் சென்றுள்ளதில் அவர் காணாமல்போயுள்ளார்.
இவ்வாறு காணமால் போனவர் ஓந்தாச்சிமடம்கிராமத்தில் வசித்துவரும், கிழக்குப் பல்கலைக் கழகமாணவன் அன அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த தோடிஉடைந்த நிலையில நீர் நிரம்பியவாறு கரைஒதுங்கியுள்ளது. எனினும் காணாமல்போன இளைஞனைமீனவர்களும், உறவினர்களும் இணைந்துதேடிவருகின்றனர். இந்நிலையில் இஸ்தலத்திற்குவிரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர்.