பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏர் நிலம் அமைப்பின் மனிதாபிமானப் பணி

( வாஸ் கூஞ்ஞ)

தாயக மக்களுக்கு பல்வேறுபட்ட சமுக நலப்பணிதனை ஆற்றிவரும் ஏர் நிலம் அமைப்பு .அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டத்தினை முன்னெடுத்தது.

சுவிட்சர்லாந்து  கோல்டாக்இ செங்காளன் மாநிலத்தில் புலம்பெயர்ந்து வாழும்  திரு.வீரகத்தி  சிவராசா  அவர்களின்  373200  ரூபாய்  நிதியுதவியில் தலா 5000 ரூபாய் பெறுமதிமான உலருணவுப் பொதிகள் கிளிநொச்சி இ முல்லைத்தீவு இ மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள 73 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில் ஜோசப் வாஸ் நகர் உதயபுரம் இ துள்ளுகுடியிருப்பு இ நடுக்குடா இ பாவிலுப்பட்டங்கட்டி குடியிருப்பு இ கவயன்குடியிருப்பு இ கீழியன்குடியிருப்பு  போன்ற  இடங்களில் தனிமையில் வாழும் முதியவர்கள் இசிறு  குழந்தைகளை  உடைய குடும்பங்கள் இ மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கும் குடும்பங்களை சேர்ந்த குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது

இந்த சமூகப்பணிகளை மன்னார்  கிளிநொச்சி முல்லைத்தீவு  ஏர்நிலம் நிர்வாகிகள் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது என்பதும்  குறிப்பிடத்தக்கது