ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம்  மீள் உருவாக்கம்.

(எம்.ஏ.ஏ.அக்தார்)   யாழ்ப்பாணம்- ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் மீள் உருவாக்கல் நிகழ்வு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வட மாகாணத்திற்கான உப தலைவர் சட்டத்தரணி  பா.தவபாலன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது முன்னாள் நீதிபதி சரோஜினி இளங்கோவன் ஏகமானதாக சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம் 1987 ஆம் ஆண்டிலிருந்து செயலிழந்த நிலையில் 37 வருடங்களின் பின் மீண்டும் புத்துயிர்பு பெற்றுள்ளது.