(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) தற்பொழுது மன்னாரில் டெங்கு நோய் பரவாதிருப்பதில் சுகாதாரப் பகுதினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றபோதும் மன்னாரில் ஏற்பட்டு வரும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக இந் நோய் பரவாதிருக்கும் நடவடிக்கையாக
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகவேஸ்வரன் தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இதற்கான ஆலோசனை கூட்டம் இடம்பெற்றது.
இதில் கடந்த காலத்திலும் தற்பொழுதும் மன்னாரில் டெங்கு நோய் தொற்றாளர்களின் விபரங்கள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டதுடன் தொடர்ந்து மன்னாரில் இந்நோய்க்கு மக்கள் உள்ளாகாது இருப்பது தொடர்பாகவும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.