(ருத்திரன்) கோறளைப்பற்று மேற்கு, மத்தி ஆகிய பிரதேசங்களில் காணப்படும் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் கோறளைப் பற்று மேற்கு மற்றும் கோறளைப் பற்று மத்தி பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் தலைமையில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபை கட்டிடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்குடா கிளை நிருவாகிகள் பள்ளிவாயல் பரிபாலன சபையினர் இ வர்த்தக சங்க நிருவாகிகள் மற்றும் தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் டாக்டர் உதுமாலெப்பை தேசிய அமைப்பாளர் டாக்டர் இவை.எஸ்.எம் சியா ஊர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.