போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவர் கைது.

handcuffed arrested man behind prison bars. copy space
(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் நிந்தவூர் அட்டப்பள்ளம்  பிரதேசத்தில் திங்கட்கிழமை (8)  மாலை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான பணம், போதைப் பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
 நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப்  வழிநடத்தலில்  இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றி வளைப்பானது இன்று காலையிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கைது செய்யப்பட்ட 32 33 34 வயதுடைய 3  சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாடு பூராகவும் விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை  அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனையில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப்  வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.