சுவிசில் நவபாசான சக்தி வேல்

குருமகான் அவர்களின் தவ வேள்வி நாளில், ஆலய அறங்காவலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் முன்னிலையில், நவ பாசான இரண்டு வேல்களை குருமகான் கையால் ஆசீர் வாதத்துடன் சுவிட்சர்லாந்து கதிர்வேலாயுத சுவாமி ஆலய நிறுவனரும் உலக இந்து ஆத்மீக அறக்கட்டளை தலைவருமான திரு. வேலுபிள்ளை கணேசகுமார் அவர்கள் மற்றும் திருமதி. மகாதேவி கணேசகுமார் அவர்களிடம் வேள்வி மண்டபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சபைதனில் பக்தி பூர்வமாக இரண்டு வேல்கள் வழங்கபட்டது
குருமகானின் தவவேள்வியின் போது பிரணவ ஆலயத்தில் 21 நாள் தியான பீடத்தில் நவபாசான வேலை பிரபஞ்ச சக்தி ஈர்க்கப்படவும் நவபாசான வேலில் சக்தி ஆற்றல் தவத்தால் சக்தியூட்டபடவும் குருமகான் ஆசீர்வாத்துடன் பிரமிட்டில் 21 நாள் வைக்கப்பட்டது. குருமகான் தவஆரம்பத்தின்போது 7முறை சங்கு ஓலிக்க சந்தோச அலைகலுடன் மக்கள் பிராணவளையத்தினை வலம் வந்து தவம் துவங்கபட்டது.
இந்த பொன்னான நாளில் மார்கழி முதல் நாள் தவம் மலர்ந்தது.
இந்த உலக சமாதான ஆலயத்தில் பிரபஞ்ச மகாதவவேள்ளி 07.01.2024 அன்று வேள்வி நிறைவு விழா கண்டது.

இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நக்கீரர், பொள்ளாச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம். குருமகான் பீடாதிபதி பாலபிரஜாபதி அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நவ பாசானவேல் மூல வரலாறு
வேதாரண்யத்தில் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் 1000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு படிப்பு, உணவு, தங்கும் வசதிகளுடன் இலவசமாக குருகுலத்தை நடத்திவரும்; திரு வேதரத்னம் அவர்கள் தாயுமானசுவாமியின் 10-வது தலைமுறையை சேர்ந்தவரான, வேதரத்னம் அவர்களின் கனவில், நாவல்பழம் போல் ருத்ராட்சம் மணி அணிந்து ஜரோப்பா கண்டத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள முருகன் கோவிலில், அறங்காவலராக இருப்பவருக்கு நவ பாசான வேல் செய்ய தகவல் சொல்ல சொல்லி முருகபெருமான் தன் கனவில் கட்டளையிட்டதாக அவர் தெரிவித்தார்.
திரு வேலுபிள்ளை கணேசகுமார் அவர்களுக்கு இத்தகவலை கடித மூலம் தெரிவித்தார்.
வேதரத்னம் அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் முருகனை தருசிக்க சென்ற போது அங்கு திரு வேலுபிள்ளை கணேசகுமார் அவர்களை சந்தித்தார். அவர்களிடம் வேதரத்னம் அவர்கள் தன் கனவில் முருகன் வந்து ஜரோப்பா கண்டத்தில் சுவிட்சர்லாந்து மக்களின் துயர் துடைக்க நவ பாசான வேல் செய்து வைத்து ஜரோப்பா கண்டத்து மக்களுக்கு தன் அருளையும் புகழையும் பரப்ப சொல்லி அந்த தகவலை உங்களிடம் சொல்ல சொல்லியதாக முருக பெருமான் கட்டளை இட்டதாக சொன்னார்.
அதுபோல பரஞ்சோதி மகான் சுவிட்சர்லாந்து வந்தபோது இந்த கோவிலுக்கு இன்னும் ஒரு வேல் வரும் என்று கூறினார். அந்த இருவரின் வாக்கு பிரகாரம் இன்று வேல் செய்யப்பட்டுள்ளது. (இந்த இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததில்லை) எல்லாம் முருகன் செயல்.
திருமூர்த்திமலையின் பரஞ்சோதி குருமகான் அவர்கள் நல்லூர் செல்லும் போது திரு வேலுபிள்ளை கணேசகுமார் அவர்களை சந்தித்து நவ பாசான வேல் பற்றி பேசினார்.
அந்த நேரத்தில் வேதாரிணயம் வேதரட்ணம் அவர்கள் சொன்ன விடயம் நினைவுக்கு வர குருமகானிடம் வேலுப்பிள்ளை கணேசகுமார் அவர்கள் வழிமுறை கேட்டு அவரிடம் அந்த பொறுப்பை கொடுத்தார். அதன் இந்தப்பணி சிறப்பாக நிறைவேறியது.
இதற்குரிய முழு செலவீனத்தை   செங்காலன் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் முன்னாள் தலைவர் திரு கணேசகுமார் , ஆலயத்தின் முன்னாள் பொருளாளர் திரு. சதா அற்புதராசா  இருவரும்   இணைந்து ஏற்றுக்கொண்டார்கள்.
திருமூர்த்திமலையில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு குருமகான் அவர்கள் நவ பாசான வேலை திரு. வேலுப்பிள்ளை கணேசகுமார் அவர்கள் மற்றும் திருமதி. மகாதேவி கணேசகுமார் அவர்களிடம் வழங்கபட்டது.

34-வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வி துவக்க விழா நவபாசான சக்தி வேல்
குருமகானிடம் ஆசீர்வதித்து வழங்கிய நாள் (17.12.2023)