கோட்டைக்கல்லாறு பாலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும்  கனரக வாகனமும்  விபத்து.

(அஸ்ஹர் இப்றாஹிம்) மட்டக்களப்பு இருந்து கல்முனை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும், தம்புள்ள நோக்கி பயணித்த கனரக வாகனமும் கோட்டைக்கல்லாறு பாலத்தில் நேருக்கு நேர் மோதுண்டு[7] விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். பலத்த காயங்களுக்குள்ளான கனரக வாகன சாரதி களுவாஞ்சிக்குடி ஆதார வைத்சியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.