மட்டு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிசார் மீது இளைஞன் தாக்குதல்

handcuffed arrested man behind prison bars. copy space

(கனகராசா சரவணன்)  மட்டக்களப்பு கொக்குவில்  பொலிஸ் நிலையத்தில் பொலிசார் மீது இளைஞன் ஒருவர் தாக்குதல்  நடாத்தியதில் 4 பொலிசார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த  இளைஞன் அவரது தாயார், சகோதரி ஆகிய 3 பேரையும் எதிர்வரும் 17 ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சனிக்கிழமை (06) உத்தரவிட்டார்.

கொக்குவில் 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவர் மதுபோதையில்  சம்பவதினமான வெள்ளிக்கிழமை 5 ம் திகதி மாலை 6 மணிக்கு அந்த பகுதிவீதியில் நிறுத்திவைத்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ள நிலையில் அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துகொண்டார்.

இதனையடுத்து மதுபோதையில் இருந்த இளைஞனை அவரது தாயார் சகோதரி தமது தோல்களில் சுமந்தவாறு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்த பொலிஸ் சாஜன் ஒருவர் கதிரையில் இருக்குமாறு தெரிவித்த நிலையில் குறித்த இளைஞன் அந்த கதிரையை தூக்கி பொலஸ் மீது தாக்குதல் மேற்கொண்டதில் அவர்படுகாயமடைந்தார்.

இந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் இருந்த ஏனைய பொலிசார் குறித்த இளைஞனை மடக்கிபிடித்து கைவிலங்கிட்டு பொலிஸ் நிலைய கைதி கூட்டின் வெளிபகுதில் வைத்திருந்த நிலையில் அந்த இளைஞன் தனது தலையை  கூண்டின் கதவில் அடித்ததையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனை தடுக்க முற்பட்டபோது அவரை வாயால் கடித்து அவரது சீருடையை கிளித்த நிலையில் அவரை காப்பாற்ற சென்ற இரு பொலிசார் மீது இளைஞனுடன் அவரது தாயார் சகோதரிகள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டதில்; காயமடைந்த 4 பொலிசார் மற்;றும் பொலிசார் மீது தாக்குதல் நடாத்திய இளைஞன் உட்பட 5 பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச் சம்பவத்தில் இளைஞன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை ஆஜர்படுத்திய போது அவர்களை  எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை கைது செய்யப்பட இளைஞன் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் வீதியல் செல்வோர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

handcuffed arrested man behind prison bars. copy space