வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி.

(ரூத் ருத்திரன்) திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு பாடசாலைகளில் தஞ்சமடைந்தோருக்கான உலர் உணவுப் பொதிகள் மற்றும் நுளம்பு வலைகள் என்பன அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் வழங்கப்பட்டன.
வெருகல் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க இவ் மனிதாபிமான உதவிகள்  இன்று(6)வழங்கி வைக்கப்பட்டது.கிழக்கில் ஏற்பட்ட பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கிழக்கில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் காரனமாக மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.அந்த வகையில் வெருகல் பிரதேசத்தில் வட்டவான்,மாவடிச்சேனை,சேனையூர்,ஆகிய கிராமங்களைச் சேர்ந்தோரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.அவ்வாறு பாதிக்கப்பட்டு வட்டவான் மற்றும் மாவடிச்சேனை பாடசாலைகளில் தங்சம் அடைந்திருக்கும் 271 குடும்பங்களுக்கு தலா 4235.00ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டன.இன்றைய நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் அகம் மனிதாபிமான இணைப்பாளர் உட்பட உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் வெருகல் பிரதேச சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.க.ருத்திரன்.

WhatsApp Image 2024-01-05 at 9.45.04 AM.jpegWhatsApp Image 2024-01-05 at 9.45.06 AM (1).jpegWhatsApp Image 2024-01-05 at 9.45.05 AM.jpegWhatsApp Image 2024-01-05 at 9.45.08 AM (1).jpegWhatsApp Image 2024-01-05 at 9.45.06 AM.jpegWhatsApp Image 2024-01-05 at 9.45.09 AM.jpegWhatsApp Image 2024-01-05 at 9.45.08 AM.jpeg