கிழக்கு மாகாண அஞ்சல் கட்டட தொகுதி மட்டக்களப்பில் திறந்து வைப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மடகிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக கட்டட தொகுதியானது மட்டக்களப்பில் கெளரவ போக்வரத்து, நெடுந்சாலைகள்

 மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தனவினால் இன்று (06) திறந்து வைக்கப்பட்டது.

பாரம்பரிய நடனம் இசை முழங்க  அதிதிகள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றி நிகழ்வு இடம் பெற்றது.

கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி எம்.எச்எம். அஸ்லம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு அபிவிருத்தி குழு தலைவருமான சிவனேசதுறை சந்திரகாந்தன், வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டனர்.

2019ம் ஆண்டு  அஞ்சல் திணைக்களத்தின் 448 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அஞ்சல் நிர்வாகத் கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு  இன்று கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதான், வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட,  அஞ்சல் மா அதிபதி ருவன் சத்துமார மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024-01-06 at 14.23.50 (1).jpegWhatsApp Image 2024-01-06 at 14.23.50.jpegWhatsApp Image 2024-01-06 at 14.23.46.jpegWhatsApp Image 2024-01-06 at 14.23.45.jpegWhatsApp Image 2024-01-06 at 14.23.45 (1).jpegWhatsApp Image 2024-01-06 at 14.23.43.jpegWhatsApp Image 2024-01-06 at 14.23.44.jpegWhatsApp Image 2024-01-06 at 14.23.42.jpegWhatsApp Image 2024-01-06 at 14.23.42 (1).jpegWhatsApp Image 2024-01-06 at 14.23.06.jpeg