வற்வரிப்பு மூலம்  மக்கள் கொதித்து எழும்பி போராடுவார்கள் மீண்டும் ஒரு அரக்கலயை உருவாக்கும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் எச்சரிக்கை.

(கனகராசா சரவணன்) சிங்கள தேசம் தங்களின் கதிரைகளுக்காக அடிபிடிபடுகின்றதே தவிர அப்பாவி மக்கள் நவலன் தொடர்பாக பொறுப்புனர்சியற்ற நிலையில் காணப்படுகின்றனர் இந்த வற்வரிப்பு மூலம்  மக்கள் கொதித்து எழும்பி போராடுவார்கள் மீண்டும் ஒரு அரக்கலயை உருவாக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசய மக்கள் முன்னணி காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (5) மாலை க்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 24 ம் ஆண்டு நினைவேந்தலில் அன்னாரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிங்கள தேசம் தமிழ் மக்களது போராட்டம் ஒரு பயங்கரவாத போராட்டம் என இந்த உலகத்துக்கு தெரிவித்துவந்த காலப்பகுதியிலே தமிழ் மக்களுடைய ஆயுத போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் சிங்கள மக்கள் போன்று சம உரிமையோடு நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்ற நியாயப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தியமையால் அவர் சிங்கள தேசத்தினால் 2000ம் ஆண்டு சந்திரிக்காவின் ஆட்சிகாலத்திலே சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

மாமனிதர் குமர் பொன்னம்பலம் தாயக தேசத்திற்கு மிகப் பெரும் சொத்தாக இருந்தவர் வடகிழக்கில் இளைஞர் யுவதிகள் சிங்கள பௌத்த தேசியவாதத்தினால் மிக மோசமாக தாக்கப்பட்டு கைது செய்து சிறைகளிலே அடைக்கப்பட்டு மிக மோசமாக கொடூரமாக படுகொலை செய்யப்பட்துடன் சிலர் எவ்விதமான ஆதாரங்களும் இன்றி பல ஆண்டுகளாக சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல இளைஞர்களை இலவசமாக நீதிமன்றில் வாதாடி அவர்களை மீடடெடுத்தார். அவர் சுயநலமற்ற துணித்தல் மிக்க நேர்மையான தமிழனாக இருந்த காரணத்தாலே அவர் படுகொலை செய்யப்பட்டார்

இன்று அவருடைய மகன் கஜேந்திரகுமார்  அதே நேர்மையுடன் தமிழ் தேசிய உணர்வுடனும் தமிழ் மக்களுக்கு ஒரு நிம்மதியான அரசியல் தீர்வு வேண்டும் என்பதற்காக அவருடைய தகப்பன் வழியிலேஇன்று தமிழர்களுடைய தேசத்திலே ஒரு உறுதியான தலைமைத்துவமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அவருடைய அணியைச் சேர்ந்த நாங்கள் அவரின் வழிகாட்டலிலே தமிழ் மக்களுக்கு எங்கே அநீதி அநியாயம் நடக்கின்றதே அங்கு நாங்கள் சென்று அதனை ஆராய்ந்து அந்த பிரச்சனையை உலகத்திற்கு தெரியப்படுத்தி வருகின்றோம்.

கிழக்கு மாகாணத்திலே எங்களுடைய மக்களது ஏகப்பட்ட காணிகள் அபகரிக்க ப்பட்டுள்ளதுடன் வளங்கள் சுரண்டப்பட்டுள்ளது இவ்வாறான நிலமையில் தமிழர்கள் இந்த தீவில் இருக்கமுடியாத சூழ்நிலையை சிங்கள பௌத்த தேசியவாம் ஏற்படுத்துகின்றது என்பதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆணித்தரமாக உலகிற்கு தெரியப்படுத்தி வருகின்றது.

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயம் இந்த தாயகத்தில் சுயநிர்ணய உருமையுடனும் சுயகௌரவத்துடனும் அவர்கள் வாழ்வதற்கு எப்போது அங்கீகரிக கப்படுகின்றதே அன்றுதான் தமிழர்கள் இந்த தேசத்தில் பாதுகாப்பாக வாழமுடியுமே தவிர 13 திருத்தமே வேறு திருத்தங்களே தமிழர்கள் நிம்மதியா இருக்க போவதில்லை எனவே தமிழர்களின் தேசம் அங்கீகரக்க வேண்டும் அதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் அந்த விசாரணை மூலம் தான் இந்த தீவில் தமிழர்கள் தனித்துவமான இனமாக இந்த மண்ணில் வாழமுடியும்.

யுத்தம் முடிந்த காலம் தொடக்கம் இந்த உள்ளக விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க போவதில்லை ஆகவே சர்வதேச சமூகம் எங்கள் மக்கள் மீது இடம்பெற்ற இனழிப்பை விசாரிக்க வேண்டும் என தொடர்ச்சியாக கூறிவருக்கின்றோம். வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு ஒரே ஒரு உறுதியான தலைமைத்துவமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இருக்கின்றது

இந்த மண்ணில் இடம்பெற்ற இனழிப்பை கடந்த 13 வருடமாக உலகத்துக்கு தெரியப்படுத்தி வருகின்றோம் ஆனால் வல்லாதிக்க நாடுகள் தங்களது பூலோக அரசியலுக்காக வடகிழக்கை மையப்படுத்தி இங்கு இருக்கின்ற பல தமிழ் தலைமைத்து வங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து இயக்கிவருகின்றனர். எனவே இந்த தரப்புக்களை நிராகரித்து தமிழ்; மக்களின்; நியாயமான அரசியல் கோரிக்கையை முன்வைத்து வருகின்ற எமது கட்சியை வருகின்ற தேர்தலில் பலப்படுத்த வேண்டும்.

தமிழ்களின் தேசம் அங்கீகரக்க ஒரு சரியான தலைமைத்துவத்தின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும் அதனால் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அந்த உறுதியான தலைமைத்தின் வழியிலே பெரும்பாலனவர்கள் நாடாளுமன்றில் இருப்பார்களாயின்  உலகம் அந்த தலைமைத்துவத்தின் கதையைத்தான் கேட்கும் அந்த இடத்தை எமது கட்சி அடையும் அடுத்து தேர்தலில் வடகிழக்கிலே  ஆகக்கூடிய ஆசனங்களை எமது கட்சி பெறும்.

இந்த நாடு வறுமை கோட்டு நிலையில் போய் கொண்டிருக்கும் மக்கள் அந்த நிலையினை தாக்குப்பிடிக்க முடியாது குறிப்பிட்ட வருமானத்துக்குள் வாழ்கையை கொண்டு நடாத்த வேண்டிய சூழ் நிலையில் புதிதாக 18 வீதமாக வற் வரி விதிக்கப்பட்டுள்ளது எவ்வாறு கோட்பாய ஜனாதிபதி ராஜகஸ் அரசை மக்கள் துரத்தியடித்தார்களே அவ்வாறு மக்கள் இந்த வற் வரி விதிப்புக்கு எதிராக இதனால் மக்கள் கொதித்து எழுந்து போராடுவார்கள் நாடாளுமன்றம் உடன் கலைக்கப்படவேண்டு;ம் என்றார்

IMG_0939.JPGIMG_0920.JPGIMG_0926.JPGIMG_0934.JPGIMG_0929.JPG