பட்டிருப்பு வலய உத்தியோஸ்தர்கள் அம்பாறை கல்வி வலயத்திற்கு கள விஜயம்.

(அஸ்ஹர் இப்றாஹிம்) பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி சார் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வின் போது உத்தியோகத்தர்களால் முன்மொழியப்பட்ட மற்றும் நிவர்திக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அம்பாறை கல்வி வலயத்தின் களத் தரிசிப்பின் மூலம் அனுபவக் கற்றல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இக் களத்தரிசிப்பின் போது  அம்பாறை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிர்வாக ரீதியான சிறந்த நடைமுறைகள் தொடர்பாக அவதானிக்கப்பட்டதோடு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறீதரன் மற்றும் அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.அசந்தி ஆகியோரிடையேயும் இரு அலுவலக உத்தியோகத்தர்களிடையேயும் பரஸ்பர கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
மேலும், அம்பாறை ,உஹண மத்திய மகா  வித்தியாலயத்தில் கடமையாற்றிய முன்னாள் அதிபரும் தற்போதைய அம்பாறை, சத்தாதிஸ்ஸ மகா வித்தியாலயத்தின் அதிபருமான ஆர்.என்.டி..ஜயந்தரட்நாயக அவர்களிடமும் அவரது பாடசாலை உத்தியோகத்தர்களிடமும் இருந்து பல்வேறு உணர்வு பூர்வமான மற்றும் பிரயோக ரீதியான நடைமுறைகளையும் கேட்டு அறிந்து கொண்டமையானது அலுவலக உத்தியோகத்தர்களுக்கு சிறந்த முன்மாதிரியான பண்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு பெரிதும் பயனுடையதாக அமைந்துள்ளதாக பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

20240106_081514.jpg20240106_081602.jpg20240106_081442.jpg20240106_081539.jpg