முடிசூட்டப்பட்டு 100 வது ஆண்டை முன்னிட்டு மடு அன்னை மறைவாட்டத்தில் வலம் வருகின்றாள்.

(வாஸ் கூஞ்ஞ) 1924 ஆம் ஆண்டு கொழும்பு ஆயரும் இவருடன் இணைந்து இந்தியாவிலிருந்து வந்த ஆயரும் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்ட தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு 25 வது ஆண்டு யூபிலியை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட பாதுகாவலியாம் மடு அன்னையின் திருச்சுரூபம் மன்னார் மறைமாவட்ட பங்கு தளங்களுக்கு கொண்டு செல்லப்படுவது இங்கு வழமையானதொன்றாகும்.

இதற்கமைய இவ்வருடமும் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100 வது ஆண்டு யூபிலி தினத்தை முன்னிட்டு மடு அன்னையிள் திருச்சுரூபம் மடுவிலிருந்து மன்னார் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறைமாவட்டங்களின் பங்குத் தளங்களுக்கு ஞாயிறு (07) முதல் கொண்டு செல்லப்படுவதற்கான சகல ஆய்த்தங்களையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

‘மரியன்னையோடு நம்பிக்கையின் திருப்பயணிகளாகும்’ என்ற கருப்பொருளுக்கேற்ப மக்களின் தேவைகள் நிறைவேறப்படவும் . நாட்டில் அமைதியான சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும் சமாதானத்துக்கான ஒரு திருப்பயணமாக இது அமைவதாக மன்னார் திருஅவையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை (07) காலை 8 மணியளவில் மடு அன்னையின் திருச்சுரூபம் அன்னை வீற்றிருக்கும்  சிம்மாசனத்திலிருந்து இறக்கப்பட்டு மன்னார் பேராலயத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.

மடு அன்னையின் மன்னார் . முருங்கன் . மடு மற்றும் வவுனியா மறைக்கோட்ட பங்குகளுக்கான தரிசிப்பு ஒழுங்குகளை மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மடு அன்னையின் திருச்சுரூபம் இறைமக்களின் தரிசிப்புக்காக ஞாயிறு (07) காலை 10.30 மணியிலிருந்து  திங்கள் கிழமை (08) காலை 8 மணி வரைக்கும் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயதத்pல் எழுந்தருளி இருப்பார்.

திங்கள் கிழமை (08) காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 4.30 மணி வரை எழுத்தூர் ஆலயத்திலும்

திங்கள் (08) கிழமை பிற்பகல் 5 மணியிலிருந்து செவ்வாய் கிழமை (09) காலை 8 மணி வரை தாழ்வுபாடு ஆலயத்திலும்.

செவ்வாய் கிழமை (09) காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 4.30 மணி வரை தோட்டவெளி ஆலயத்திலும்.

செவ்வாய் கிழமை (09) பிற்பகல் 5 மணியிலிருந்து புதன் (10) காலை 8 மணி வரை ஜோசப்வாஸ் நகர் ஆலயத்திலும்

புதன் கிழமை (10) காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 4.30 மணி வரை சிறுத்தோப்பு ஆலயத்திலும்

புதன் கிழமை (10) மாலை 5 மணியிலிருந்து வியாழக்கிழமை (11) காலை 8 மணிவரை பேசாலை ஆலயத்திலும்

வியாழக்கிழமை (11) காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை கீழியன்குடியிருப்பு ஆலயத்திலும்

வியாழக்கிழமை (11) மாலை 5 மணியிலிருந்து வெள்ளிக்கிழமை (12) காலை 8 மணிவரை தலைமன்னார் பங்கிலும்

வெள்ளிக்கிழமை (12) காலை 9 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை சாந்திபுரம் ஆலயத்திலும்

வெள்ளிக்கிழமை (12) மாலை 5 மணியிலிருந்து சனிக்கிழமை (13) காலை 8 மணி வரை பள்ளிமுனை பங்கிலும்

சனிக்கிழமை (13) காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை உயிலங்குளம் பங்கிலும்

சனிக்கிழமை (13) மாலை 5 மணியிலிருந்து ஞாயிறு (14) காலை 8 மணி வரை வங்காலை பங்கிலும்

ஞாயிறு (14) காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.30 வரை வஞ்சியன்குளம் பங்கிலும்

ஞாயிறு (14) மாலை 5 மணியிலிருந்து திங்கள் (15) காலை 8 மணி வரை நானாட்டான் பங்கிலும்

திங்கள் (15) காலை 8.30 மணியிலிருந்து 4.30 மணிவரை கட்டைக்காடு பங்கிலும்

திங்கள் (15) மாலை 5 மணி தொடக்கம் செவ்வாய் (16) காலை 8 மணிவரை அரிப்பு பங்கிலும்

செவ்வாய் (16) காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 4 மணிவரை முள்ளிக்குளம் பங்கிலும்

செவ்வாய் (16) மாலை 5 தொடக்கம் புதன் கிழமை (17) மாலை 4.30 மணிவரை பொன்தீவுகண்டல் பங்கிலும்

புதன் கிழமை (17) மாலை 5 மணியிலிருந்து வியாழன் (18) காலை 8 மணிவரை சிறுகண்டல் பங்கிலும்

வியாழன் (18) காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 4.30 வரை முருங்கன் பங்கிலும்

வியாழன் (18) மாலை 5 மணியிலிருந்து வெள்ளி (19) காலை 8 மணிவரை அளவக்கை பங்கிலும்

வெள்ளி (19) காலை 8.30 மணியிவிருந்து மாலை 5.30 மணிவரை கற்கிடந்தகுளம் பங்கிலும்

வெள்ளி (19) மாலை 6 மணியிலிருந்து சனி (20) காலை 8 மணிவரை கட்டையடம்பன் பங்கிலும்

சனி (20) காலை 8.30 மணியிலிருந்து மாலை 3.30 மணிவரை மடுறோட் ஆலயத்த்pலும்

சனி (20) மாலை 4.30 மணியிலிருந்து ஞாயிறு (21) காலை 8 வரை குஞ்சுக்குளம் பங்கிலும்

ஞாயிறு (21) காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிவரை கண்ணாட்டி பங்கிலும்

ஞாயிறு (21) பிற்பகல் 1.30 மணியிலிருந்து 4.30 மணிவரை பெரியகட்டு ஆலயதத்pலும்

ஞாயிறு (21) பிற்பகல 5 மணியிலிருந்து திங்கள் கிழமை (22) காலை 8 மணிவரை செட்டிக்குளம் பங்கிலும்

திங்கள் கிழமை (22) காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 3.30 மணிவரை இலுப்பைக்குளம் ஆலயத்திலும்.

திங்கள் கிழமை (22) பிற்பகல் 5 மணியிலிருந்து செவ்வாய்கிழமை (23) காலை 8 வரை கோமரசன்குளம் ஆலயத்திலும்

செவ்வாய்கிழமை (23) காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 3.30 மணிவரை மகாறம்பைக்குளம் ஆலயத்திலும்

செவ்வாய்கிழமை (23) பிற்பகல் 4 மணியிலிருந்து புதன்கிழமை (24) காலை 8 மணிவரை இறம்பைக்குளம் ஆலயத்த்pலும்

புதன்கிழமை (24) காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 12.30மணிவரை கனகராயன்குளம் ஆலயத்திலும்

புதன்கிழமை (24) பிற்பகல் 1 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை ஓமந்தை ஆலயதத்pலும்

புதன்கிழமை (24) பிற்பகல 5.30 மணியிலிருந்து வியாழக்கிழமை (25) காலை 8 மணிவரை வேப்பங்குளம் பங்கிலும்

வியாழக்கிழமை (25) காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 4 மணிவரை தரணிக்குளம் ஆலயத்திலும்

வியாழக்கிழமை (25) மாலை 5 மணியிலிருந்து வெள்ளிக்கிழமை (26) காலை 7 மணிவரை பம்பைமடு ஆலயத்திலும்

வெள்ளிக்கிழமை (26) காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிவரை பண்டிவிரிச்சான் ஆலயத்திலும்

வெள்ளிக்கிழமை (26) பிற்பகல் 2 மணியிலிருந்து பிற்பகல் 6 மணிவரை தட்சணாமருதமடு ஆலயங்களுக்கும் மடு அன்னையின் திருச்சுரூபம் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் வழிபாடுகளுக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.