மழை வெள்ளம் குறைவடைந்துவரும் நிலையில் நாட்டில் டெங்கு.

(வி.சுகிர்தகுமார்)  மழை வெள்ளம் குறைவடைந்துவரும் நிலையில் நாட்டில் டெங்கு நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
ஜனாதிபதியின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளதுடன் இதற்கமைவாக கிராமங்கள் தோறும் டெங்கொழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அறிவுறுத்தலுக்கமைவாக பிரதேச செயலாளர் பிரிவின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள கிராம உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களிலும் டெங்கொழிப்பு நடவடிக்கை இன்று (05) முன்னெடுக்கப்பட்டன.
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ந.கிருபாரன் மற்றும் முகாமைத்து பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் ஆகியோரின் மேற்பார்வையில் டெங்கொழிப்பு சிரமதானங்கள் இடம்பெற்றன.
இதன் அடிப்படையில் பல்வேறு பகுதிகளிலுமிருந்த குப்பை கூழங்கள் அகற்றப்பட்டதுடன் டெங்கு பரவக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் சிரட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் யாவும் தீயிட்டு எரிக்கப்பட்டன.
இந்நிலையில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மாத்திரமின்றி அரச திணக்களங்;கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பொது இடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் டெங்கொழிப்பு சிரமதானங்களை வெள்ளிக்கிழமை தோறும் மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.