எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே நபர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும்இ அவ்வாறு இணைந்து கொள்ளும் யாருக்கும் எந்த அமைச்சுகளோ,பதவிகளோ,திணைக்கள தலைவர் பதவிகளோ அல்லது கூட்டுத்தாபண பணிப்பாளர் பதவிகளோ வழங்கப்படாது என்றும் நடுநிலையான முற்போக்காக பயணிக்கும் நபர்களுக்கு உகந்த தரப்புக்கே இதில் பயணிக்கலாம் என்றும்,வரப்பிரசாதங்கள்,சலுகைகளை வழங்கி உறுப்பினர்களை தக்கவைத்தல் மற்றும் சேர்த்துக் கொள்ளல் என்பன மேற்கொள்ளப்படாது எனவும் இந்த கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சோசலிசம்,தீவிர இடதுசாரிகள்,கம்யூனிசம், முதலாளித்துவம் ஆகியவற்றால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்றும்,இதற்கு சமூக ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட மனிதாபிமான முதலாளித்துவம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், எனவேஇந்தக் கூட்டணி அமைப்பதில் வரப்பிரசாதங்கள் சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்றும், கொள்கைகளுக்கு அமைய நாட்டுக்கு சேவையாற்றக்கூடியவர்களே உள்வாங்கப்படுவார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 60 ஆவது கட்டமாக கெஸ்பேவ ஸ்ரீ சுதர்சன் மாதிரி பாடசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (04) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உலகில் முன்னேற்றப் பயணம் என்று ஒரு கருத்து உள்ளதாகவும்,இது உள்ளகம் மற்றும் வெளியகம் என்று 2 பகுதிகளாக முன்னேறுகிறது என்றும்,எமது நாட்டில் நடக்க வேண்டியது மூலதன வளங்களை நாட்டிற்குள்ளேயே பெற்றுக் கொள்வதுதான் என்றாலும்இ மூலதனத்தை நாட்டை விட்டு வெளியே அனுப்புவதே இங்கு நடந்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கொரோனா காலத்தில்,மூலதன வளத்தை சீனாவில் இருந்து வெளியேற்றும் போது இந்தியா போன்ற நாடுகள் அந்த மூலதன வளத்தைப் பெற இந்தியா போன்ற நாடுகள் போராடும் போது நமது நாட்டு ஆட்சியாளர்கள் நாலா பக்கமும் சுவர்களைக் கட்டிக் கொண்டு தேசப்பற்றை உயர்த்திப் பிடித்து பிரஸஷ்தி பாடியவாறு இருந்தமையினாலயே நாடு வங்குரோத்தடைந்ததாகவும், இநாட்டுத் தலைவர்களின் திருட்டுத்தனத்தினால் நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை நாடு இழந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
வங்குரோத்தான நாட்டில் கூட திருட்டு நடந்து வருகிறது.
வங்குரோத்து நாட்டில் இருந்தும் திருட்டு நடைபெறுவதாகவும்இமக்களின் வலியை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், எதிர்க்கட்சியினர் அதனை நன்கு புரிந்து கொண்டுள்ளனர் எனவும் எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.
பெண்களின் சுகாதார வசதிகள் குறித்து கவனம் செலுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்.
பெண்களின் சுகாதார நலம் குறித்து தான் பேசிய போது அவமானப்படுத்தப்பட்டாலும் தனது கருத்தை இன்று நாடு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும்இஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில்இஅரச ஆதரவின் கீழ் பெண்களின் சுகாதாரத்திற்கான வசதிகளை வழங்க செயற்படுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது.
பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 60 அரச பாடசாலைகளுக்கு 572 லட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.