திருகோணமலை  பொது வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணி தொடர்பான கலந்துரையாடல்.

(எப்.முபாரக்) திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமைவாக திருகோணமலை பொது வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணி தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில்  (03) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக 50 ஏக்கர் நிலம் முன்மொழியப்பட்டுள்ளது.
அதில் 25 ஏக்கர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கு தேவையான கலந்துரையாடல்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட காணி தொடர்பில் எழுந்துள்ள சில பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.  சுதாகரன், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களும் கலந்து கொண்டனர்.