(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு உன்னிச்சை, நவகிரி மற்றும் அம்பாறை ரம்புக்கன் ஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் மட்டு செங்கலடி,சித்தாண்டி வெல்லாவெளி பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்குமாறு நேற்று (2) மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் அறிவித்துள்ளது
சீரற்ற கால நிலையால் தொடர் மழை காரணமாக இன்று காலை 8 மணிவரையிலாக 24 மணித்தியாலயத்தில் மட்டக்களப்பில் 169.4 மில்லி மீற்றர் மழை வீழ்சியடைந்துள்ளதுடன் மாவட்டத்திலுள்ள பெரிய குளங்களான உன்னிச்சை, நவகிரி , வடமுனை, வெலியாகந்தை குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகளும், நவகிரிகுளம், றூகம்குளம், வடமுனைகுளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளது
அதேவேளை அம்பாறை ரம்புக்கன் ஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள மையால் மட்டக்களப்பு செங்கலடி, சித்தாண்டி பகுதியில் வெள்ளம் ஏற்படும் நிலைமை காணப்படுகின்றதுடன் மட்டு நவகிரிகுளம் வான்கதவு திற்கப்பட்டுள்ளாதால் வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் அறிவித்துள்ளது.
இதேவேளை மழை வெள்ளத்தினால் மாவட்டத்தில் உள்ள பல தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையடுத்து பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லரிப்பு பிரதேசத்தில் 56 குடும்பங்கள் இடைத்தாங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் உள்ளூர் பிரதேசங்களுக்காகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பல பிரதேசங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பல வயல்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.