திருமலை குச்சவெளியில் மாணவர் கௌரவிப்பு விழா.

 (ஹஸ்பர்)  திருகோணமலை  குச்சவெளி அஹதியா பாடசாலையின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி மாணவர் கௌரவிப்பும் பட்டமளிப்பு விழாவும் குச்சவெளி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று(02) நடைபெற்றது.

 அஹதியா பாடசாலையின் அதிபர் முஹம்மது சிபுனிஸ் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில் டீன் பவுண்டேசனின் தலைவர் முஹம்மது ஆதில், சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆர். அரியரத்தினம், பௌத்த சமய குரு, இந்து சமய குரு, மௌலவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  ஐந்து புலமை பரிசில் பரிட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள், அஹதியா பாடசாலையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.