ஒன்பது ஏ.சித்திகளைப்  பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

(ஹஸ்பர்)  கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தினால் ஒன்பது ஏ. சித்திகளைப்  பெற்ற மாண வர்களுக்கான கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கிண்ணியா மத்திய கல்லூரி  அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது.
வலய கல்வி பணிப்பாளர்  ஏ. நசூகர் கான் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணாமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் கலந்து கொண்டார் , இதேவேளை கிண்ணியா  வலய பிரதிக் கல்வி பணிப்பாளர்களான, செய்யது அஹமட், ஏ.எல்.சிராஜ், எம்.சி. எம்.நஸார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி, முள்ளிப்பொத்தானை  கோட்டங்களைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.
தமது திறமைகளை நிரூபித்துக் காட்டிய மாணவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய கல்வியலாளர்களும் வெற்றிக்  கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
அத்துடன் மாணவர்களின் கலை,கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.