கல்முனை  ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற புதுவருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.

( வி.ரி. சகாதேவராஜா) புதிய ஆண்டில் கடமைகளை ஆரம்பிக்க சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு அரச சுற்றுநிருபத்துக்கமைவாக கல்முனை  ஆதார வைத்தியசாலையில் 2024.01.01 ஆம் திகதியன்று நடைபெற்றது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசிய கொடியேற்றல் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேலும் பணிப்பாளரினால் வைத்தியசாலையின் எதிர்கால திட்டங்கள் செயல்பாடுகள் பற்றி உரையாற்றப்பட்டது.

வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டு சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.