மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான வீதி மூடப்பட்டது.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) பராக்கிரம வாவியின்; வான் கதவுகள் இன்று (29) இரவு 10.00 மணியளவில் திறக்கப்படவுள்ளதால், மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்படும் என்று பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வெலிகந்த, திம்புலாகலை மற்றும் மட்டக்களப்பு செல்லும் பயணிகளின் வசதிக்காக கதுருவெல புகையிரத நிலையத்தில் இருந்து மனம்பிட்டி நோக்கி விசேட புகையிரத சேவையொன்று காலை 10.30 மணி முதல் இடம்பெறும் என கதுருவெல புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாற்றுப் பாதையாக கிரிதலே, எலஹெர, பகமூனை, தெஹிஅத்த கண்டிய வீதி ஊடாக பயணிக்க முடியும் என அறிவித்துள்ளது.