கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்.

(எருவில் துசி) திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பிரதேசத்தில் கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயமடைந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (29) காலை கஞ்சிகுடிச்சாறு ரூபஸ்குளம் காட்டு பகுதியில் தந்தையும் மகனும் விறகு எடுப்பதற்காக காட்டுக்குள் சென்ற வேளை இருவருக்கும் கரடி தாக்கியுள்ளதுடன் தலை , காலில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் .

திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.