(வாஸ் கூஞ்ஞ) தலைமன்னார் பொலிஸ் பிரிவில் ஒரு குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டைச் சுற்றியுள்ள வெள்ளநீருக்கள் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தலைமன்னார் பொலிஸ் பிரிவில் செல்வேரி என்ற கிராமத்தில் வியாழக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
இவரின் மரண விசாரனையை முசலி பகுதி மரண விசாரனை அதிகாரி ஜனாப்.ஏ.ஆர்.நஸீர் மேற்கொண்டபோது இறந்தவரின் மணைவியும் பெற்றோரும் இறந்தவரைக் கண்ட அவரின் நண்பரும் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
இவர்களின் சாட்சியங்களில் தெரிய வருவதாவது
சம்பவம் அன்று காலையில் இறந்தவரின் நண்பர் இவரைத் தேடிச் சென்றபோது தனது நண்பரான மரியதாசன் ரொனால்ட் ரீகன் (வயது 43) அவரின் வீட்டைச்சுற்றியுள்ள வெள்ளநீருக்குள் இறந்த நிலையில் கிடக்கக் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இஙந்தவரின் மனைவி மற்றும் பெற்றோர் தங்கள் சாட்சியத்தில் இறந்தவர் கடந்த ஒன்றரை வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்வதாகவும் இவர் மட்டுமே தனிமையில் தனது வீட்டில் வசித்து வந்ததாகவும்
இவருக்கு அடிக்கடி வலிப்பு தன்மை எற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் உடலை மன்னார் பொது வவத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தலைமன்னார் பொலிசார் இம்மரணம் தொடர்பாக விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.