திருக்கோவிலில் சுனாமி 19ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள்

(திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)

திருக்கோவில் பிரதேசத்தில் 498 உறவுகள் ஆழிப்பேரலையால் உயிர் இழந்தனர்.

அம்பாரை திருக்கோவில் 02 சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் சுனாமி 19ஆவது ஆண்டு நினைவு தின அஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளும் இடம்பெற்று இருந்தன.

இவ் சுனாமி அஞ்சலி நினைவுகள் திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.சுஜீந்திரகுமார் தலைமையில் திருக்கோவில் 02 சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழக திடலில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் இன்று காலை 09.5க்கு தீபச் சுடர்கள் ஏற்றப்பட்டு பிரார்த்தனைகள் இடம்பெற்று இருந்தது.

இதன்போது நினைவு தூபிக்கு முன்னால் பிரதான தீபச்சுடர் ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து திருக்கோவில் பிரதேசத்தில் உயிர் நீத்த சுமார் 498 உறவுகளின் நினைவாக மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு ஆத்மசாத்தி வேண்டிய பிரார்த்தனைகள் மற்றும் மௌன அஞ்சலிகள் இடம்பெற்று இருந்தன.

இவ் அஞ்சலி பிரார்த்தனைகளில் முன்னாள் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் திருக்கோவில் பொலிஸ் நிலைய உத்தியோத்தர் பிரதேச செயலக கிராம நிருவாக உத்தியோகத்தர் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.