கராத்தே கலையில் கறுப்புப்பட்டி வீரர்களாக இரு பிரதேசசெயலாளர்கள்

வி.சுகிர்தகுமார்

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் ஆகியோர் கராத்தே கலையில் கறுப்புப்பட்டி வீரர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
கராத்தே கலையினை பயின்றுவந்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிலரும் தரப்படுத்தலுக்கு உள்வாங்கப்பட்டு பல்வேறு தரங்களுக்கும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நேற்று முன் தினம் (22) இடம்பெற்ற கராத்தே தரப்படுத்தலுக்கான பரீட்சையில் பங்கேற்ற இவர்கள் சிறப்பான முறையில் திறமைகளை வெளிப்படுத்தி தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இப்பயிற்சி நெறியினை UKRA கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியரும்;  தேசிய ரீதியில்  6 Dan சர்வதேச ரீதியில்  5TH Dan  தரத்தில் உள்ளவரும் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தருமான சிகான் ரவிச்சந்திரன் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.