13 வயதுடைய பாடசாலை மாணவி பித்திகா நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். 

(அஸ்ஹர் இப்றாஹிம்)  பலபிட்டிய பாலத்திற்கு அருகில் உள்ள வாவியில்  குளிப்பதற்குச் சென்ற பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொட்டாவ மத்தேகொட பிரதேசத்தில் வசிக்கும் கொட்டாவ ஆனந்த கல்லூரி மாணவியான 13 வயதுடைய பித்திகா ரிசாது என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த சிறுமி  பலப்பிட்டியவில் வசிக்கும் தனது பாட்டி மற்றும் தாத்தாவை பார்ப்பதற்காக கொட்டாவையில் இருந்து பலப்பிட்டிக்கு சென்ற போது இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 இம்மாணவிக்கு தெரிந்த மேலும் இரு சிறுமிகளுடன் பலப்பிட்டிய பாலத்திற்கு அருகில் உள்ள வாவியில் நீராடச் சென்ற நிலையில், இந்த சிறுமி திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.