திருகோணமலையில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்.

(அ . அச்சுதன்)   தேசிய வாசிப்பு மாதம் –  இவ்வருடம் ”உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது’ எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின்; செயலாளர் திருமதி.ந.யாழினி அவர்களின் தலைமையின் கீழ் உப்புவெளி, சாம்பல்தீவு, வெள்ளைமணல், சீனக்குடா ஆகிய  பொதுநூலகங்களால் வாசகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் பல்வேறு நிகழ்வுகள்; முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

விசேட அம்சமாக கேள்வி நேரம் நிகழ்வின் இறுதிச்சுற்றுப் போட்டி 08.12.2023 அன்று உப்புவெளி பொதுநூலகத்தில் முன்னெடுக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். நிகழ்வானது இரு நிமிட மௌன இறைவணக்கத்துடன் நூலகர் க.வரதகுமார் அவர்களின் வரவேற்புரையுடன் நிதி உதவியாளர் திரு.ளு.சுபாஸ், நூலக உதவியாளர்கள் திருமதி.சி.பிரபாலினி, திருமதி.க.கார்த்திகா, திருமதி.பி.செல்வகலா, S.புஸ்பமலர், திரு.இர்பான் உசைத் ஆகியோருடன் அலுவலக உத்தியோகத்தர்கள் திருமதி.கோ.தயாழினி, திருமதி.ந.நீரஜா மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரும்   கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதற்கான விநாக்கள் மற்றும் நிகழ்வு ஒழுங்கமைப்பு சபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் திரு.மு.சிவகுமார் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. உலகம், இலங்கை, திருகோணமலை, உள்ளூராட்சி மன்றங்கள், மருத்துவம், தொழில்நுட்பம், விஞ்ஞான அறிவியல் சார்ந்த விடயங்கள் மாணவர்களது அறிவுத் திறன் தேடல் ஆற்றலை மேம்படுத்தும் பொருட்டும் போட்டிப் பரீட்சைகளுக்காக தங்களை தயார்படுத்தும் வண்ணமும் திறந்த போட்டி நிகழ்வாக  ஒழுங்கமைக்கப்பட்டதும் சிறப்பாகும்.
நடுவர்களாக திரு.V.மகேஸ்வரன் (ஓய்வு நிலை அதிபர்), திரு.மு.காளிதாஸ் (விரிவுரையாளர்), திருமதி வானதி (ஆயுர்வேத வைத்தியர்) ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான கருத்துரைகளும், தங்களது அனுபவ பகிர்வு பற்றியும் தெளிவுபடுத்தப்;பட்டதுடன் மாணவர்களது கருத்துக்களும் பரிமாறப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.
சபைக்குட்பட்ட பாடசாலைகளின் தரம் பத்து மாணவர்களிடையே ஒரு பாடசாலையிலிருந்து நான்கு பேர் கொண்ட குழுக்களுக்கிடையே கேள்வி நேர போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதன் இறுதிச் சுற்றுப் போட்டியானது 08.12.2023 அன்று உப்புவெளி பொதுமுநூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தி.செல்வநாயகபுரம் இ.ம.வி, தி.மாதுமை அம்பாள் தமிழ் வித்தியாலயம், தி. ஆத்திமோட்டை தமிழ் வித்தியாலயம், தி. சீனக்குடா தமிழ் வித்தியாலயம், தி. வெள்ளைமணல் அல் அக்ஸா முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் போட்டியிட்டன.
இறுதிச்சுற்றில் முதலாமிடத்தினை தி. வெள்ளைமணல் அல் அஸார் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் S.F.றிப்னா, M.H.F.நஸ்றியா, P.N.F.றக்ஸனா, M.M.மாஸா ஹிப்லா, இரண்டாமிடத்தினை தி. ஸ்ரீ மாதுமை அம்பாள் தமிழ் வித்தியாலய மாணவர்கள் S.வெண்ணிலா, R..சாருஜன், M.டிருஷிகா, S.திவ்யா மூன்றாமிடத்தினை தி.ஆத்திமோட்டை தமிழ் வித்தியாலய மாணவர்கள் T.யஷிகா K.சிறோமி டெனிஸ்கா, K.சுரேனா, K.தரணியா ஆகியோரும் தமது பாடசாலை சார்பாக போட்டியிட்டமைமை குறிப்பிடத்தக்கது.